என்னை விட 16 வயது சின்னப் பெண்ணாக இருந்தும் என்னை ஏன் திருமணம் செய்துக் கொண்டாள் என கட்டிய மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்துக் கொன்ற கணவன் தலைமறைவு.

தஞ்சாவூர் வட்டாத்தி கொல்லை ஊரை சேர்ந்த 19 வயதான ஜோதி கல்லூரியில் படித்து வந்த நிலையில் கத்தாரில் வேலைப் பார்த்து வந்த 36 வயதான மணிகண்ட பிரபு இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் என்றாலும் மணிகண்ட பிரபு ஊருக்கு வந்த ஒரே வாரத்தில் அவசர அவசரமாக திருமணம் நடத்தி வைக்கபட்டுள்ளது.

தன்னை விட 16 வயது சின்ன பெண்ணாக இருந்து ஏன் திருமணத்திற்க்கு ஒத்துக் கொண்டாள், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி கல்யாணம் பண்ணது ஏன்? என பல கேள்விகள் கணவருக்கு எழுந்துள்ளது.

இதனால் திருமணமான நாளில் இருந்து மனைவியை சந்தேகத்துடன் நடத்தி கொடுமைப் படுத்தி வந்துள்ளார் கணவர் மணிகண்டன், இந்த நிலையில் தான் அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடி விருந்துக்காக உறவினர் வீட்டுக்கு ஜோதி மற்றும் மணிகண்டன் ஜோடியாக சென்றுள்ளனர் சந்தோஷமாக பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தவர்கள்.

அருகில் உள்ள கோயிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பியுள்ளனர். வழக்கத்திற்க்கு மாறாக மாற்று பாதையில் அழைத்து வந்த கணவரை ஏன் ஏரிக்கரை வழியாக செல்கிறோம் என கேட்டுள்ளார் மனைவி.

jothi

அதற்க்கு கொஞ்சம் காத்தார பேசிக்கிட்டே போகலான்னு சொல்லி பக்கத்தில் இருந்த கரு வேல மரக்கட்டையை வைத்து அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார் கணவர்.

சம்பவ இடத்திலேயே மண்டை சிதறி பிணமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதியை பார்த்து உறவினர்கள் கதறி அழுதுள்ளனர், மேலும் போலீசில் புகார் அளித்த நிலையில் தலைமறைவான மணிகண்ட பிரபுவை தேடி வருகின்றனர் போலீசார்.

Categorized in: