சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்வது தற்போது அதிகமாக வழக்கத்தில் உள்ள விஷயம் தான் அதற்க்கு கோடிக்கணக்கில் பணம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

– Advertisement –


முன்பெல்லாம் டிவியில் தான் விளம்பரங்கள் வரும் அழகு சாதன பொருட்கள், உணவு திண்பண்டங்கள், உடைகள் என நாளுக்கு நாள் பிராண்டுகள் அதிகரித்து வருகிறது.

பிரபலங்கள் பலர் இது போன்ற விளம்பரங்களில் நடிப்பது வழக்கம் படத்திற்க்கு இணையாக விளம்பரங்களில் கூட சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் தற்போது தொலைக்காட்சியை விட மக்கள் அதிகமாக சமூக வலைதள ஆப்களில் தான் நேரத்தை செலவிட ஆரம்பித்து உள்ளனர், அந்த மக்களை குறி வைத்தும் அதிக விளம்பரங்கள் கொடுக்கபடுகிறது.

priyanka chopra deepika padukone

அந்த வகையில் தான் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் பலர் விளம்பரத்திற்காக பதிவுகளை போட்டு அதற்க்கு கோடி கணக்கில் சம்பளம் பெற்று வருகிறார்களாம்.

அமீபத்தில் வெளியான அந்த லிஸ்டில் நடிகர் ஷாருக்கான் 80 லட்சம் முதல் 1 கோடி வரையில் விளம்பர பதிவுகளுக்கு சம்பளம் பெறுகிறாராம்.

– Advertisement –


தீபிகா படுகோன், அலியா பட், பிரியங்கா சோப்ரா உள்ளீட்ட பல பாலிவுட் பிரபலங்கள் சுமார் 1 ல் இருந்து 2 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரத்தில் நடிப்பதும், திரைபடத்தில் நடிப்பதை விடவும் அதிகமான சம்பளம் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட சம்பளம் பெறுவதாக கூறப்பட்டதை அடுத்து,

Alia Bhatt

ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் சமீபத்தில் கூட சில பிரபலங்கள் தரமற்ற பொருட்களுக்கு விளம்பரம் செய்து லட்ச கணக்கில் சம்பளம் பெற்று,

அந்த பொருட்களின் உண்மை தன்மை வெளியில் தெரிய வந்ததால் அதிக பிரச்சனை கிளம்பியதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: