நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபல இயக்குனர் படத்தில் ஒரு சீனுக்கு மட்டும் வந்து நடித்து கொடுக்க கோடியில் சம்பளம் கேட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

– Advertisement –


2016ல் வெளியான கிரிக் பார்டி படம் மூலமாக அறிமுகமான ராஷ்மிகா டியர் காம்ரேட், கீதா கோவிந்தம், என துவங்கி தற்போது புஷ்பா வரை கலக்கி வருகிறார்.

இவரது சினிமா பிரவேசம் தெலுங்கு படங்கள் என்றாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் அதுவும் அவரது கியூட் ரியாக்‌ஷனுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

ராஷ்மிகா மந்தனா

புஷ்பா படத்தில் என்ன தான் சமந்தா குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்தாலும் அதற்க்கு சற்றும் குறையாமல் கிளாமரில் கட்டி போட்டுள்ளார் ராஷ்மிகா.

இந்த படத்தில் நடிக்க மட்டும் ராஷ்மிகா மந்தனா 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்று கொண்டார். இதனை அடுத்து அவர் சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

– Advertisement –


இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி வரும் படம் ஆர்சி15 இதில் ராம் சரண் நடித்து வருகிறார்.

இதில் அவரை பேட்டி எடுக்கும் சீனில் மட்டும் நடிக்க ராஷ்மிகா மந்தனா 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது.

RC15

அதிலும் முழுசாக 1 மணி நேரம் கூட நடிக்காத நிலையில் 1 கோடியா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: