நடிகர் விஜயை அடுத்து சொகுசு கார் விசாரணைக்கு வரும் தனுஷ் வழக்கு.
உலகின் அதி சொகுசு அதாவது லக்சரியான கார்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்கள் பெரும்பாலும் அதிகமாக கவனத்தை ஈர்க்க கூடியவை.
அதிலும் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்கால் அதிக கவனம் பெற்றதுக்கு நடிகர் விஜய் முக்கியமான காரணம். அதாங்க அந்த ஜர்ஜ் கூட தரமா செஞ்சு விட்டாரே.
அதே மாடுலேஷன்ல நடிகர் விஜயை அடுத்து இப்ப நடிகர் தனுஷ். அவர்களும் கார் டேக்ஸ் அதாவது சொகுசு கார் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய கோரி போட்ட வழக்கும் விசாரணை வளையத்துக்குள்ள வந்திருக்காம். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் வெளி நாட்டில் இருந்து நச்சுன்னு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்கினார்.

அதற்க்கான அப்போதைய வரியாக சுமார் 60 லட்சத்து 66 ஆயிரம் கட்டணும் என வணிகத்துறை உத்தரவுப்போட ,அதெல்லாம் முடியாது கூட்டுங்க பஞ்சாயத்தைன்னு நடிகர் தனுஷ் கோர்ட்டுக்கு ‘தமிழன்’படத்துல வர தளபதி மாதிரி போக.
அந்த ஜர்ஜ் அய்யா வரியை ரத்து பண்றதா? செல்லாது, செல்லாது வேணும்னா ஒரு ஆப்பர் தரேன் கட்ட வேண்டிய மொத்த தொகையில ஒரு 50% மட்டும் அபராதமாக கட்டி ஆர் டி ஓ – ல வண்டியை ரிஜிஸ்டர் பண்ணிக்க மேன்ன்னு சொன்னாராம்.
இந்த நிலையில் தான் வழக்கு மீண்டும் விசாரணை வந்த போது நடிகர் தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகததினால் வழக்கை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஒத்தி வைச்சு தீர்ப்பு வைச்சுட்டாய்ங்கன்னு தகவல் வெளியாகியுள்ளது.