சின்ன வயதில் நல்ல விஷயங்களை நினைத்துப் பார்க்கும் போது நமது அனைவருக்கும் உணவுப் பொருட்களின் சுவையும் நினைவுகளும் தவறாமல் வந்து விடும்.

அந்த வகையில் யூடியூபர் பூடி விஷால் என்பவர் வித்தியாசமான இடங்களுக்கு புது இடங்களுக்கும் சென்று வீடியோக்களை அப்லோடு செய்து வரும் பிரபலமான நபர்.

அவரது வீடியோ ஒன்றில் சமீப காலத்தில் பஞ்சுமிட்டாய் விற்க்கும் தாத்தா ஒருவர் தான் .அட இதுல என்னப்பா இருக்கு என நினைக்கிறீங்களா ? விஷயமே அதான்.

அந்த வயதான தாத்தா பஞ்சு மிட்டாய்க்கு பதிலாக காசுக் கேட்காமல் வித்தியாசமாக தலை முடியை கேட்கிறார்.என்னங்க இது புது விஷயமா இருக்கேன்னு பார்த்தா !

அந்த தாத்தாவிடம் விக் செய்யும் நிறுவனங்கள் ஒரு கிலோ தலை முடிக்கு விலையாக 3 ஆயிரம் தருகிறார்களாம்.இதனை மையமாக வைத்து தாத்தா பஞ்சு மிட்டாய்க்கு தலைமுடி வாங்கி செம்மயாக கல்லாக் கட்டி வருகிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த பிஸ்னஸ் செம்மயா இருக்கே நம்மளும் செய்யலாம் போலருக்கே என கருது தெரிவித்து வருகின்றனர். வீடியோவும் செம்ம வைரல் ஆகி வருகிறது.

Categorized in: