விருந்துக்கு வந்த நபருக்கு கறியை குறைவாக வைத்த நபரை வெட்டி கொலை செய்த விவகாரம் வெளியாகி அந்த பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த ஷேக்கான் என்ற நபர் அப்பகுதியில் நடந்த திருமண விருந்திற்க்கு வந்து இருந்தார்.
அங்கு திருமணத்தில் உணவு பரிமாறும் வேலைக்கு வந்தவர் சிவா, அவர் அங்கு திருமண நிகழ்வுக்கு பின்னர் விருந்து பரமாறிக் கொண்டு இருந்தார்.
அப்போது சாப்பிட உட்கார்ந்த ஷேக்கானுக்கு சிவா என்பவர் மட்டன் கறி பரிமாறும் போது மற்றவர்களை விட சற்றுக் குறைவாக பரிமாறினாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷேக்கான் அந்த சிவான் என்பவருடன் வாக்கு வாதம் செய்துள்ளார்.மேலும் அது கைகலப்பாக மாறியதால் நிலமை கைமீறியுள்ளது.
இதனை அடுத்து ஷேக்கான் மீது சிவா போலீசில் புகார் அளித்துள்ளார்.இதனால் ஆத்தி அடைந்த ஷேக்கான் அவருக்க்ய் எதிராக திட்டம் தீட்டினார்.
சில நாட்களுக்கு பின்னர் சிவாவுடன் சமாதானம் செய்துக் கொள்ள போவதாக தனிமையில் அழைத்து பேச அவர் கூப்பிட்டு உள்ளார்.
அதனை நம்பி சென்ற சிவாவை யாரும் இல்லாத இடத்தில் வைத்து அரிவாளினால் சரமாறியாக வெட்டிக் கொலை செய்த ஷேக்கான்.
யாருக்கும் தெரியாமல் சிவா உடலை அவரது இடத்தில் புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல ஊருக்குள் நடமாடி உள்ளார்.
அப்போது சிவாவை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ஏற்கனவே சிவா ஷேக்கான் சண்டையை வைத்து சந்தேகம் வந்துள்ளது.
இதனை அடுத்து ஷேக்கானை போலீசார் விசாரணை செய்த போது சிவாவை சமாதானம் பேச அழைத்து அரிவாளினால் வெட்டிக் கொன்றதையும்,
அவரது உடலைப் புதைத்ததையும் ஷேக்கான் ஒப்புக் கொள்ள போலீசார் ஷேக்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சாதரண கறிக்காக கொலையா என அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்து உள்ளனர்.