புருஷன் பொண்டாட்டி சண்டைக்களுக்காக பெரும்பாலும் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்க்கு வருவதை பார்த்து இருப்பீங்க.

ஆனால் ஒரு நபர் தனது மனைவி மட்டன் சமைத்து தர மறுப்பத்கால் அவரை கைது செய்ய போலீசுக்கு போன் அடித்த சம்பவம் குறித்து கேள்விப் பட்டு இருக்கீங்களா ?

தெலுங்கானா மாநிலத்தின் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு அழைப்பு வந்துள்ளது அந்த போன் தான் இந்த கலேபரத்திற்க்கு காரணம்.

நவீன் என்ற நபர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு தனது மனைவி மட்டன் சமைத்து தராமல் கடுப்பேதுகிறார்.அவளை கைது பண்ணுங்க என கேட்டுள்ளார்.

முதலில் எவனோ விஷக்கிருமி தான் பிராங்க் பண்ணுகிறான் போல என நினைத்து கண்டுக்காத காவலர்கள்.

பின்னர் தொடர்ந்து 6 முறைக்கு மேல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் தொடர்ந்து வர காண்டான போலீசார்.

அவரது முகவரியை வாங்கிக் கொண்டு அங்கு சென்றுப் பார்த்த போது தான் அந்த நபர் மது போதையில் இருந்தது தெரிய வந்ததுள்ளது.

மேலும் நவீன் குடித்து விட்டு மது போதையில் மனைவியிடம் மட்டன் சமைக்க கோரி வம்பு செய்ய,கடுப்பானவர் செய்ய மறுத்து விட்டாராம்.

இதனால் அவரை பழிவாங்க தான் நவீன் இப்படி செய்தாராம்.இதனால் கடுப்பான காவல் துறை அன்றைக்கு அவரை விட்டு வந்து விட்டனர்.

பின்னர் அடுத்த நாள் போதை தெளிந்த பின்னர் நவீனை காவல் துறை அழைத்து அவர் செய்த செயலுக்கு அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துவிட்டார்கள்.

இதனை அடுத்து தவறை உணர்ந்த நவீன் காவல் துறையிடம் மன்னிப்பு கேட்டதனால் அவருக்கு அபராதம் மட்டும் விதித்து எச்சரித்து அனுப்பி விட்டார்களாம்.

Categorized in: