சமூக வலைதளத்தில் சந்தித்து காதல் பண்ணிய காலம் மாறி தற்போது ஆன் லைன் கேமில் ஒன்றாக விளையாடி அதன் மூலமாக பழகி திருமணம் செய்த கொண்டடுள்ளனர்.
காதல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.காக்கா குருவிக்கூட காதலிக்கிறது என்பது போல இபோதெல்லாம் பால்வாடி தாண்டும் முன்பே பல சில்லுகள் கமிட்டாகி விடுகின்றது.
சமூக வலைதளங்கள் வந்த பின்னர் முகம் தெரியாத நபர்கள் கூட நட்பாக பழகி காதலாக மாறி வாழ்க்கை துணையாக மாற்றிக் கொள்கின்றனர்.
இது நல்ல விதமாக போனால் பிரச்சனை இல்லை அதுவே சிக்கலில் முடியவும் ஆபத்தில் சிக்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறதை நாம் அறிந்து இருக்க வேண்டும்.
இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த ஃபின்லே பிரவுன், 20 வயதான இவர் Call of Duty எனும் பிரபல ஆன்லைன் விளையாட்டை அதிகமாக விளையாடி வருகிறார்.
இந்த விளையாட்டில் அயர்லாந்தைச் சேர்ந்த 19 வயதான சோஃபியா கார்லில் என்பவருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதனைப் பயன்படுத்தி பழகி வந்த இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 கொரானா காலகட்டங்களில் சேர்ந்து வாழவும் ஆரம்பித்து விட்டனர்.
இதனை அடுத்து இருவரும் திருமண வாழ்க்கையில் முறையாக இணைந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.