அண்ணாத்த படம் அப்டேட் என அறிவித்துவிட்டு சன்பிக்சர்ஸ் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்திற்க்கு அபிமன்யூ சிங் உறுதி செய்யபட்டு செய்தி வெளியானது ரசிகர்களை வெறுப்பாக்கியுள்ளது.
அண்ணாத்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை ஒட்டி துவங்கபட்டது, லைக்கா நிறுவனத்தில் வரிசையாக படம் பண்ணிட்டு இருந்த தலைவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ்க்கு பண்ண ஆரம்பித்தனர்.
குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஸ் என பெரிய நட்சத்திட பட்டாளங்களே நடித்துக் கொண்டிருக்கும் அண்ணாத்த படம் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது.
சிறுத்தை சிவா, தல அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை அடுத்து அண்ணாத்த படம் எடுத்து வருகிறார். இந்த நிலையில் வரும் தீபாவளிக்கே படம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருந்த நிலையில்,
சன்பிகார்ஸூம் அடுத்த அப்டேட் என பிடப்பு எல்லாம் கொடுத்து எதிர்ப்பார்ப்பை தூண்டி விட பர்ஸ்ட் லுக்காக இருக்கும் என காத்திருந்த ரசிகர்கள் தலையில் கல்லை போடுவது போல தகவலை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவதி தீரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங் தான் வில்லனாக காஸ்டிங் செய்வதாக வெளியான தகவல் ரசிகர்களை காண்டாக்கியுள்ளது.
இப்பதான் காஸ்டிங் முடிவு செய்து அவர் நடித்து எப்பய்யா படம் வரும் என காண்டாகியுள்ளனர் தலைவர் ரசிகர்கள்.