தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாராக கொண்டாடப் படும் ரஜினிகாந்த் கையில் இருக்கும் குழந்தை புகைபடம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.

– Advertisement –


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வரும் நடிகர். அவருடன் நடித்தவர்கள் பலர் அவரை உழைப்பிற்க்கு உதாரணமாக தான் சொல்கிறார்கள்.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த படம் செம வரவேற்பைப் பெற்ற நிலையில், அதில் குஷ்பூ, மீனா, நயந்தாரா என பெரும் பட்டாளமே இருக்கிறது.

anuradha sriram


தற்போது சூப்பர் ஸ்டார் கையில் சிறுமி ஒருவரை ஏந்தியபடி பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்று வெளியாகி செம வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

அந்த குழந்தை யாருப்பா என கேள்வி எழும்ப, பலரும் மீனா என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சிலர் கீர்த்தி சுரேஷ் எனவும் கமெண்ட் அளித்துள்ளனர்.

– Advertisement –


இந்த நிலையில் தான் அந்த சிறுமி பிரபல பின்னனி பாடகி அனுராதா ஸ்ரீராம் என தெரியவந்துள்ளது. இவர் தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பாடகி.

ஏஆர் ரகுமான் இசையில் பம்பாய் படத்தில் மலரோடு மலராகி பாடல் முதல் துவங்கி தற்போது வரை கிட்டதட்ட 3000 க்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் அனுராதா.

anuradha sriram

இவர் கர்நாடக இசை கலைஞர் இவரின் மின்சார கனவு படத்தின் அன்பென்ற மலையிலே யாராலும் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல் எனலாம்.

அந்த வகையில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பாடகியாக அசத்தி வருகிறார் அனுராதா.

– Advertisement –


தற்போது விஜய் தொலைக்காட்சி யில் மிக பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உட்பட பல்வேறு பாடல் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார்.

anuradha sriram

மேலும் இந்த படம் எடுக்கபட்ட போது அனுராதா ரஜினிகாந்த் உடன் காளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது எடுக்கப்பட்டது என கூறுகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: