பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் டிராக் அரபிக் குத்து வெளியாகி சக்க போடு போட்டு வரும் நிலையில் அந்த படத்தின் நாயகியை விட பாடலை பாடிய ஜோனிதா ட்ரெண்டாகி வருகிறார்.
– Advertisement –
தளபதி விஜய் 66 பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் என மாறுபட்ட குழுவுடன் இந்த படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது
இந்த படத்தில் தளபதி இராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். துப்பாக்கி படத்தில் மிலிட்டரில் உடையில் செம டிரீட் வைத்த தளபதி மீண்டும் அதே கெட்டப்பில் வருகிறார்.
பீஸ்ட் படத்தின் இரண்டு கட்ட படபிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் முதற்கட்டமாக பிஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அரபிக் குத்து காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. லட்சகணக்கான ரசிகர்கள் இந்த வீடியோவி பார்த்து ரசித்து உள்ளனர்.
– Advertisement –
மேலும் இந்த படத்தின் சிங்கிள் டிராக்கான அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் ஜோனிதா காந்தி பாடியுள்ளார்.
இந்த பாடலில் பூஜா ஹெக்டே நடனம் ஆடி இருந்தாலும் ஜீனிதாவின் பாடலில் திளைத்த ரசிகர்கள் பலர் அவரது பெயரை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
பூஜாவுக்கு பதிலாக ஜோனிதா வையே கதா நாயகியாக போட்டு இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அவர் சினிமாவுக்கு ஒகே சொல்கிறாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
– Advertisement –
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.