பிக் பாஸ் புகழ் வனிதா மூத்த மகன் ஸ்ரீ ஹரி சினிமாவுக்குள் நுழைகிறாரர் என தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

– Advertisement –


தளபதி உடன் சந்திர லேகா படத்தில் அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகுமார் இவர் ராஜ்கிரன் உடனும் அடுத்து படங்கள் நடித்தார்.

சீக்கிரமாகவே திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு பிறந்த மகன் ஸ்ரீ ஹரி.

இவர்கள் வாழ்க்கை கசிந்து விடவே விவாகரத்து நாடி நீதிமன்றத்தில் வழக்கு இருந்த போது பல பிரச்சனைகள் நடந்தது. அதில் வனிதா மற்றும் அவரது அப்பா இடையே மகனுக்காக நடு ரோடில் நடந்த சர்ச்சை வீடியோ இன்றளவும் அதிக பார்வையாளர்களை கொண்டது.

Vanitha Son Sri Hari

பிறகு இரண்டு முறை திருமணம் செய்து அதிலும் விவாகரத்து பெற்ற வனிதா இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்ட பல அதிரடிதான பேச்சுகள், சண்டைகள் என பிக் பாஸ்க்கு டி ஆர் பி கண்டெண்ட் கிரியேட்டராக இருந்தவர் வனிதா.

பிறகு படங்கள், சீரியல் என செம பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த லாக்டவுனில் பீட்டர் பால் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

– Advertisement –


அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோ நேர்காணல்கள் என பிரபலமாக இருந்தார் தீடீரென் அவரது மனைவி இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.

பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர் இருவரும் பிரிவதாக வனிதா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கிடையே அவ்வபோது அவர் பதிவுகளும் சர்ச்சையை கிளப்பியது.

Vanitha Son Sri Hari

தற்போது பிக் பாஸ் அல்டிமேட் கடந்த ஜனவர் 31 முதல் வெளியாகி ஓடி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் வனிதா விட்டதை பிடிக்க போராடி வருகிறார்.

இந்த நிலையில் தான் வனிதா மகன் ஸ்ரீஹரி சினிமாவில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளிதான சகுனி படத்திலும் அவர் நடித்து இருந்தார்.

– Advertisement –

Categorized in: