நடிகர் தனுஷ் தனது விவாகரத்து அறிவிப்பை அடுத்து சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம். அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

– Advertisement –


தனுஷ் நடித்த முதல் படம் 2000 களில் வெளியான துள்ளுவதோ இளமை.
ஷெரின், சுதீப் என பலர் தனுஷீடன் இணைந்து நடித்தனர், பின்னர் காதல் கொண்டேன் அவரது சொந்த அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார்.

தொடர்ந்து பொல்லாதவன், படிக்காதவன், புதுப்பேட்டை, அசுரன் என அடுத்து தனுஷ் தொட்டதெல்லாம் வெற்றி தான்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகராம் என்றால் அது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் தான் எனலாம்.

Dhanush Aishwarya

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் , 18 வருடம் காதலர்களாக, நண்பர்களாக, பெற்றோர்கள் என வாழ்ந்து விட்டோம்.

அடுத்தகட்டமாக நாங்கள் எங்களுக்காக வாழ விரும்புகிறோம், எங்களுக்காக பிரிகிறோம், இதில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் இது எங்க பர்சனல் என பதிவு போட்டிருந்தார்.

– Advertisement –


இது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அதிருப்திதையும் அதிகரித்தது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வின் சொந்த வாழ்க்கை எல்லா சமூக வலைதளத்தில் அளவுக்கு அதிகமாக விமர்சிக்கபட்டது.

இந்த நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இருப்பது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் எங்கோ பார்த்தது போல இருக்கா என கேப்ஷன் போட்டிருந்தார்.

Dhanush Yathra

இதனை அவரை பின் தொடரும் 4 மில்லியன் ரசிகர்களில் 3 லட்சம் பேர் தற்போது வரை லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: