சீரியலை பொறுத்த வரை எப்போதாவது தான் இவருக்கு பதில் இவர் என வரும் அதுவே பலகுவதற்க்கு சற்று சிரமம் தான்.
– Advertisement –
ஆனால் தற்போது தினம் ஒரு சீரியலில் இருந்து ஒரு நடிகர் விலகுவது வாடிக்கையாக மாறிவிட்டது. பொருளாதாரம் காரணமாக ஒரு தொடரை விட்டு மற்றொரு தொடருக்கு மாறி வருகிறார்கள்.
அந்த வகையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை தொடரில் இருந்து தீபக் விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே, கண்மணி, உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்தவர் அபி நவ்யா.
இவர் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை சீரியலில் லீடிங் ரோலில் நடித்து வரும் தீபக் உடன் காதல் வயப்பட்டார்.
– Advertisement –
நீண்ட நாள் காதலித்து வந்த அபி நவ்யா தீபக் ஜோடி கடந்த ஆண்டு நெருங்கிய சொந்தங்கள் முன்பாக சிம்பிளாக நிச்சயம் செய்து கொண்டனர்.
இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரல் ஆனது இந்த நிலையில் இந்த மாதம் 27 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆன கையோடு தீபக் தொடரில் இருந்து விலகுவதாகவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தவர்.
தனக்கு அளித்த ஆதரவை அடுத்த நடிகருக்கும் தொடருக்கு தவறாமல் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர் அடுத்த நல்ல பிராஜக்ட் மூலம் சந்திப்பதாக தெரிவித்து உள்ளார். இவரது விலகல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.