தளபதி உடன் படத்தில் நடித்த கெளரி கிஷன் ஜெர்மன் நாட்டின் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் புகைபடத்தை அவர் வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் அதை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

– Advertisement –


கெளரி கிஷன் தெலுங்கு நடிகையான வீணா கிஷன் என்பவரின் மகள். மலையாளத்தில் மார்க்கம்பளி என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

பிறகு 96 படத்தில் பள்ளிக்கூட ஜானுவாக நடித்து இருந்தார். விஜய் சேதுபதி, திரிஷா, ஆதித்யா பாஸ்கரன் எனற நடிகர்களுடன் இவர் உடன் பணியாற்றி இருந்தார்.

Gouri Kishan


இந்த படத்தின் வெற்றியை அடுத்து தளபதியுடன் லோகேஷ் கனகராஜீடன் மாஸ்டரில் நடித்து இருந்தார் இவருக்கு ஜோடியாக சாந்தனு பாக்கியராஜ் நடித்தார்.

இதனை அடுத்து கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் தனக்கென ஒரு தனி பாணியில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார் கெளரி கிஷன்.

தற்போது இவர் வாங்கியுள்ள்@ சொகுசு காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஜெர்மனியின் தயாரிப்பான Volkswagen Taigun என்ற காரை வாங்கியுள்ளார்.

– Advertisement –


இந்த காரின் விலை 13.50 லட்சம் முதல் 22 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், Taigun ஒரு SUV கார் ஆகும். இந்த கார் 1310 கர்ப் எடை கொண்டது.

அதோடு 188 கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 385 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றை கொண்டது. இந்த கார் 5 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டருக்கு இந்த கார் 18.47 கி.மீ மைலேஜ் தருமாம். இந்த காரை தான் தற்போது நடிகை கௌரி கிஷன் வாங்கி இருக்கிறார்.


இந்த காரை வாங்கும் போது எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கௌரி கிசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.சமீபத்தில் ஷாக்‌ஷி அகர்வால் ஆர் ஜே பாலாஜி என பல சினிமா நட்சத்திரங்கள் சொகுசு காரை வாங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– Advertisement –

Categorized in: