உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் 90 களில் வெளியான படம் தான் மைக்கல் மதன காம ராஜன் இந்த படத்தின் பாடல் கூட மிக பிரபலம்.

– Advertisement –


நடிகை குஷ்பூ, ஊர்வசி என ஒரு நட்சத்திர பட்டாளமே உடன் நடித்து இருந்தனர் இன்றளவும் பேசப்படும் படமாக இது இருந்து வருகிறது.

இந்த படத்தில் பணக்கார கமல் ஹாசனுக்கு வேலைக்காரனாக நடித்த பீம் பாய் சமீபத்தில் உடல் நலக் குறைவால் இறந்து போன செய்தி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Praveen Kumar Sobti

நடிகர் ப்ரவீன் குமார் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர் இவர் இது வரை 50 க்கும் மேலான படங்களில் நடித்தவர் அதிலும் மகாபாரதம் தொடரிலும் நடித்தார்.

பீமனாக மகாபாரதத்தில் நடித்தார் பிரவீன் குமார். இந்த தொடரின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் இவர் வட்டெறிதல் விளையாட்டு வீரரும் ஆவார்.

இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தங்கப் பதக்கத்தையும் வென்று உள்ளார். பின் இவர் 1970 ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தார்.

– Advertisement –


இதனை தொடர்ந்து இவர் காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்று பல விருதுகளை பெற்று உள்ளார். சினிமாவை அடுத்து அரசியலிலும் கால் பதித்தவர்.

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து போட்டியிட்ட பிரவீன் குமார் தோல்வி பெற்றதால் சிறிது காலத்தில் அதில் இருந்து விலகி பாஜகவிலும் இணைந்து கொண்டார்.

Praveen Kumar Sobti

இப்படி சினிமா விளையாட்டு, அரசியல் என பன்முக திறமைகள் கொண்ட பிரவீன் குமார் கடந்த சில நாட்களாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இயற்கை எய்தினார்.

இவரது மரணத்திற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: