சினிமா வை பொறுத்த வரை எந்த அளவிற்கு பிராண்டு புரோமோஷன் செய்யப்படுகிறதோ அந்த அளவிற்க்கு படம் ரீச் ஆக உதவும்.
நடிகர் – நடிகைகள் ஒப்பந்தமாகி நடிக்கும் படத்திற்க்கான பிரமோஷனில் எப்போது அழைத்தாலும் கலந்து கொள்வதும் வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில் தல அஜித் பெரிதாக எந்த பிரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை அதே பாணியை கடைப்பிடிக்கும் நடிகை நயன்தாரா பிரமோஷனை தவிர்ப்பவர்.
இந்த நிலையில் தான் நடிகை நயன்தாரா நீண்ட நாட்களால காதலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் திருமணம் செய்ய ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொடுத்து வருகிறாராம்.
இதற்கிடையில் நயன் தாரா தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் உடன் இனைந்து திரைப்படம் தயாரித்து அதற்க்கான பிரமோஷனிலும் கலந்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த சக பிரொடியூசர்கள் செம்ம காண்டாகியுள்ளார்களாம், கோடிக்கணக்கில் சம்பளத்தை கராராக பேசி பெற்றுக் கொள்ளும் நயன் சொந்த படத்துக்கு மட்டும் பிரமோஷன் செய்வது நல்லதுக்கில்லை என வெளிப்படையாகவே பேச்சு அடிப்படுதாம்.