10 வருட காதல் திருமணத்தை முடித்து கொள்ள போகிறாராம் சரவணன் மீனாட்சி நடிகை ரக்ஷிதா வெளியான தகவல் ரசிகர்களை மிரள வைத்து உள்ளது.
– Advertisement –
நடிகை ரட்சிதா கர்நாடகாவை சேர்ந்தவர். அவரது முதல் சீரியல் பிரிவோம் சந்திப்போம் தான் தமிழில் அவரை அறிமுகம் ஆக்கியது.
இதில் கல்யாணி, ரட்சிதா மற்ற தினேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து இருந்தனர். மேலும் இந்த தொடர் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.
இந்த சீரியலில் தொடங்கி ரட்சிதா – தினேஷ் இருவரும் சில காலம் காதலித்து வந்த நிலையில் கடந்த 2013 ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனை அடுத்தும் ரக்ஷிதா சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியார் புரம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.
தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழில் சொல்ல மறந்த கதை என்ற புதிய பிராஜக்டில் வேலை பார்த்து வருகிறார். அந்த தொடரும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தான் 10 வருட காதல் கல்யாணமாக கை கூடியும் குடும்ப வாழ்க்கை கசந்து உள்ளதாம் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பேச்சு வார்த்தை கூட இல்லையாம்.
தற்போது இருவரும் பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் அவர்கள் சட்ட ரீதியாக விவாகரத்து பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.