திருமணம் ஆன பின்பு தான் உண்மை புரிகிறது. திருமணம் சீரியல் ஸ்ரேயா காதலர் தினத்தை முன்னிட்டு ஓபனாக கொடுத்த நேர்காணல் தற்போது வைரல் ஆகிவருகிறது.

– Advertisement –


கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இளசு முதல் பெருசு வரை அனைவரையும் ரசிகர்களாக்கியது தான் திருமணம் சீரியல் என்றால் அது மிகையாகாது.

கலர்ஸ் தமிழில் வெளியான திருமணம் சீரியலில் முக்கிய லீடாக நடித்தவர்கள் தான் ஸ்ரேயா – சித்து. ஸ்ரேயா டான்சர், படிக்கும் போதே சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் கன்னடம் சீரியல்களில் நடித்து வந்தார்.

ஸ்ரேயா சித்து

அதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடரிலும் நடித்து இருந்த நிலையில், திருமணம் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருந்த சித்துவும் ஸ்ரேயாவும் கால போக்கில் அதிக நெருக்கம் காரணமாக காதலர்கள் ஆனார்கள்.

பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கென சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார்கள்.

– Advertisement –


தற்போது சித்து விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலிலும், ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி தொடரிலும் பிசியாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கணவர் சித்து வை திருமணம் செய்த பிறகு தான் ஸ்ரேயா அதிக சந்தோஷமாக இருப்பதாகவும், தனக்காக அவர் துளு மொழியை கற்று கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரேயா சித்து

மேலும் நான் வீட்டிற்க்குள் வரும் போது அவரும் அவர் வரும் போது நானும் கிளம்ப வேண்டி இருக்கும் ஆனாலும் எங்களுக்காக நேரம் செலவிட நாங்கள் தவறியது இல்லை.

சித்து போன்ற கணவர் கிடைக்க தான் அதிர்ஷடசாலி எனவும், அவரை முன்னரே கல்யாணம் செய்து இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: