யுவன் ஷங்கர் ராஜா தற்போதைய தலைமுறை வரை கொண்டாடக் கூடிய பல பாடல்களை சினிமாவிற்கு இசை அமைத்தவர்.

– Advertisement –


நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் படத்தில் அறிமுகமாகி கடந்த 25 ஆண்டுகளாக அவர் தனக்கென ஒரு இசை சாம்ராஜ்யத்தை அமைத்து உள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்பது அனைவரும் அறிந்தது தான். அவருக்கு அடுத்து இசையில் கொடிக் கட்டி பறக்கிறார் எனலாம்.

யுவன் 25

தற்போது வலிமை படத்தில் பணியாற்றி இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் வேலைப் பார்த்து வருகிறார். ஓடாத படம் ஆனாலும் அந்த பாடல்கள் யுவனால் வெற்றி காணும்.

அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜாவிற்க்கு புகழாரம் சூட்டும் வகையில் அவரை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் யுவன்.

– Advertisement –


அப்போது உணர்ச்சி வசப்பட்ட யுவன், தளபதி விஜய்யின் உதவியாளர் ஒருப் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார்.

அந்த புகைப்படத்தில் ஒருவர் யுவனிசம் என எழுதப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்த படி போஸ்க் கொடுத்து இருந்தார். அந்த நபர் திரும்பி இருந்தார்.


இது குறித்து கேட்டபோது அவர் தளபதி விஜயின் மகன் ஜோஷன் சஞ்சய் எனவும் அவருக்கு யுவன் மீது அவ்வளவு அன்பு இதை தளபதி தான் என்னோடு பகிர சொன்னார்.

எனக்கு அந்த நொடி அதிக சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது என யுவன் சங்கர் ராஜா பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: