ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் நிச்சயம்! அடுத்த சார்பட்டா ஹீரோ ரெடி.. உலக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள ஒலிம்பிக்கில் அடுத்த செம்ம மேட்டர் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப் பிரிவில் விளையாடி கொலம்பிய வீரரை 14-4 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த லெவல்க்கு முன்னேறியுள்ளாராம் ரவிக்குமார் தஹியா.

ஹரியானா, சோனிபாட் மாவட்டத்தின் நஹ்ரி பகுதியை சேர்ந்த 23 வயதே ஆன ரவிக்குமார் தஹியா சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் போல ஹரியானாவுக்கு ஸ்பெஷலே மல்யுத்தம் தான், அந்த வகையில் தஹியாவின் விருப்பதத்திற்க்கு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

முதல் கட்டமாக ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற சத்பால் சிங் என்பவரிடம் பயிற்சி பெற்றவர், பின்னர் நஹ்ரி பயிற்சி மைதானத்திலும் பயிற்சி பெற்று வந்தார்.

மகன் தஹியாவுக்கு தன் பண்ணையின் சுத்தமான பாலை கொடுக்க தினமும் சுமார் 40 கிமீ தொலைவு பயணம் செய்து மகனின் வெற்றிக்காக பாடுபட்டுள்ளது கேட்பவரை நெகிழ வைத்துள்ளது.

ரவிகுமார் தஹியா
ரவிகுமார் தஹியா

மேலும் சத்திரசால் மைதானத்தில் தக்க பயிற்சி பெற்ற ரவிக்குமார், ஜீனியர் லெவல் சுற்றிலேயே வெற்றிகளை குவித்து வந்தார்.யார் கண் பட்டுதோ ரவிக்குமார் தோள்பட்டையில் அடிபட கிட்ட தட்ட 1 வருஷம் ஓய்வில் இருந்தார்.

ஒய்வில் செம்மயா தயாராகி வந்த தஹியா 2018, 2019,2020 என அடுத்தடுத்து தங்க பதக்கங்களை வாங்கி குவித்தார். இந்த வெற்றி தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் நுழைய ரவிக்குமாருக்கு வழி வகுத்தது.

யாரிடமும் எளிதில் பேச கூச்சப்படும் தஹியா சண்டைன்னு வந்தா சார்பட்டாக்கு கொஞ்சமும் சலைச்சது இல்லன்னு நிரூபிச்சுட்டார்.

ரவிக்குமார் தஹியா இந்தியா சார்பாக அடுத்தகட்ட போட்டிக்கு சென்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Categorized in: