வாரத்தில் ஒரு நாள் மட்டும் திருட்டு மீதி நாட்கள் சொந்த ஊரில் என ஜாலியாக திருடி வந்த 3 ரோஸ்ஸ் வசமாக சிக்கியது எப்படி என விரிவாக பார்க்கலாம்

சென்னை, திருவெற்றியூரில் 50 வயது மதிக்க தக்க பார்வதி தனது மகளை பார்ப்பதற்க்காக மீஞ்சூர் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது மூன்று பெண்கள் அவருடன் பேச்சுக் கொடுத்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து பார்வதி ஸ்டாப் வந்ததும் பத்திரமாக செல்லும் படி அந்த பெண்கள் வழியணுப்பவே சந்தேகமடைந்த பார்வதி பிறகு தான் 5 பவுன் சங்கிலி காணாமல் போனதை உணர்ந்துள்ளார்.

அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும், சென்னையில் குறிப்பாக வண்ணாரப்பேட்டை, மாதவரம், திருவெற்றியூர், கோயம்பேடு என குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தொடர் திருட்டுகள் நடப்பதை கவனித்த போலீசார்.

உடனடியாக தீவிர கண்காணிப்பில் இறங்கவே சந்தேகத்திற்க்கு இடமாக சுற்றித்திருந்த மூன்று பெண்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர் அதில் தான் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சாந்தி (வயது 31), கவுரி (வயது41),சின்னத்தாய் (வயது 30) ஆகிய மூவரும் கோவில்ப்பட்டியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனராம்.

chain snatching

மேலும் வாரத்தில் திங்கட் கிழமை மட்டும் சென்னையில் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு அன்று மாலையே சொந்த ஊருக்கு ரயில் ஏறிவிடுவார்களாம்.

இதனால் கையில் சிக்காமல் தப்பித்து விடலாம என பகல் கனவு கண்ட 3 ரோஸஸ் திருட்டு களவாணிகளையும் போலீசார் வசமாக பிடித்து ஜெயிலில் போட்டுள்ளனர்.

Categorized in: