நண்பரின் மனைவியை ஆசைக்கு இணங்க மறுத்த கோபத்தில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊத்தி எரித்து கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தி உள்ளது.

குஜராத்தின் சிறு கிராமத்தில் கூலி வேலை செய்து வந்த கணவன் மனைவி இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் வருமானக் காரணமாக கணவர் வெளியூரிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அவருடன் வேலைப் பார்த்த கல்லின் எனும் நபர் கடந்த வாரம் 14 ஆம் தேதி நண்பனின் வீட்டுக்கு நலன் விசாரக்க வந்துள்ளார். வந்த இடத்தில் பெண்ணின் தனிமையை பயன்படுத்தி அவரை இச்சைக்கு அழைத்துள்ளார்.

அந்த இளம் பெண்ணோ அவனது ஆசைக்கு இணங்காமல் அவனை முடிந்த வரை தடுத்து வீட்டில் இருந்து வெளியேற்றி உள்ளார்.

மேலும் பயந்து போன அந்த இளம் பெண் அருகில் இருந்த காவல் நிலையத்தில் அந்த மிருகச்செயல் குறித்து புகார் அளிக்க அவனை அலேக்காக தூக்கிய போலீஸ் எச்சரித்து அனுப்பி உள்ளது.

பின்னர் சம்பவத்தன்று அந்த கல்லின் வீட்டு வழியாக எதேர்ச்சையாக நடந்து சென்றுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை இடை மறித்து ஏன் என்னை போலீசில் மாட்டி விட்டாய் என கல்லின் வம்பிழுத்துள்ளான்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை ஊற்றி பத்த வைத்துள்ளான் அந்த கொடூரன்.

பெண்ணின் அலறல் சத்தம் கேடு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categorized in: