திருமண மோசடிகளை நாம் தினமும் பேப்பர்களில், தொலைக்காட்சிகளில் செய்திகளாக பார்த்து வருகிறோம்.

திருமண தகவல் பதிவு சேவை மையங்கள் மூலமாக பல மோசடி பிரச்சனைகள் நடந்தாலும் கூட இன்றளவும் மேட்ரிமோணியல் வெப் சைட்டுகளில் ஆண் மற்றும் பெண்கள் தங்களுக்கான இணையை தேடி பதிவு செய்து வருகின்றனர்.

அதிலும் என்.ஆர்.ஐ மற்றும் அரசு வேலை மாப்பிள்ளைகளுக்கு கூடிதல் டிமாண்டுதான் என சொல்லாலாம், சாதாரண வேலை மற்றும் சம்பளத்தில் உள்ள ஆண்களை யாரும் கண்டுக் கொள்வதே இல்லை என்பதே நிதர்சனம்.

இந்த நிலையில் தான் சென்னை ஈ.சி.ஆர்-ஐ அடுத்த காணூரில் இளம் பெண் ஒருவர் தனது திருமணதிற்காக மணமகன் வேண்டி தனது தகவல்களை பதிவு செய்து இருந்தார்.

பெண் குடும்பத்தாரிடம் போனில் பேசிய சூர்யா, தனக்கு உங்களது மகளை மிகவும் பிடித்திருப்பத்தாகவும், தான் அரசு துறையில் வேலைப்பார்த்து வருவதாகவும் கூறினார்.

Viral News

மேலும் தனது பெற்றோர் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருவதால் அவர்களால் திருமணம் குறித்து பேசி முடியவில்லை எனவும் கதையை அளந்து தள்ளியுள்ளார்.

மேலும் திருமணத்திற்க்கு முன்பாக இருவரும் கலந்து பேசிக் கொண்டால் தான் திருமண வாழ்க்கை சீராக அமையும் என பெண் குடும்பத்தினரிடம் நல்லவர் போல நடித்துள்ளார்.

ஒருக்கட்டத்தில் அந்த பெண்ணை தனியாக சந்திக்க அழைத்த சூர்யாவின் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி இருவரும் தனிமையில் இனிமை கண்டுள்ளனர்.

அந்தரங்க வீடியோவை காண்பித்து அந்த பெண்ணிடம் இருந்து சுமார் 7 லட்சம் வரை பணம் பறித்தவர் நம்பரை ஆப் பண்ணி வைத்து விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.

Viral News

இதனை அடுத்து இளம்பெண் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சூர்யாவை மற்றொரு பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

விசாரணை நடத்தியதில் அவர் பெங்களூருவை சேர்ந்த நபர் எனவும் அவர் தந்தை உளவுத்துறையில் பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்துள்ள நிலையில் போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர்.

Categorized in: