என் பொண்ணுக்கு உன்ன மாதிரி புருஷன் தான் கிடைக்கணும்! பிரபல நடிகை மைனா நந்தினி வைரல் போஸ்ட்

சீரியலிலும் சினிமாவிலும் ஒரு சேரப் பட்டையை கிளப்பி வருபவர் நந்தினி, பிரபல தொலைக்காட்சி ஒன்றில், ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலமாக அறிமுகமானார்.

பின்னர் அதே தொலைக்காட்சியில் பல ரியாலிடி ஷோக்களிலும், தற்போது மிஸ்டர் அண்டு மிர்ஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட வைகளிலும் பங்கேற்று வருகின்றனர்.

அவர் முன்னாள் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இரண்டாவதாக காதல் கணவர் யோகேஷ்வரனை கடந்த 2019 ஆம் ஆண்டு கைப்பிடித்தார் நந்தினி.

இருவருக்கும் கடந்த வருடம் ஆண் குழந்தையும் பிறந்த நிலையில் தற்போது நந்தினி ஒரு பதிவை தனது சமூக வலை தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் மைனா நந்தினி முகத்தை கணவர் யோகேஷ் தனது மார்பில் பச்சைக் குத்திக் கொண்டு இருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு,

myna nandhini

இதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது, இதற்க்காக நான் நன்றி சொல்லமாட்டேன் ஆனாலும் நன்றி சொல்லி தான் ஆக வேண்டும்.

எனக்கு மகள் பிறந்தால் அவளுக்கும் உன்னைப் போலவே சிறந்த கணவன் கிடைக்க வேண்டுமென மனதார கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

Categorized in: