காதலி ஜாலியாக ஊர் சுற்ற வர மறுத்த ஆத்திரத்தில் பொது இடத்தில் வைத்து கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்ட்டூரில் பிடெக் படித்து வந்த கல்லூரி மாணவி ரம்மியா, இவர் மற்றொரு கல்லூரி மாணவர் சசி கிருஷ்ணா வை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.

சசி கிருஷ்ணா காதலி ரம்மியாவை பல முறை வெளியில் உல்லாசமாக சுற்றி வர அழைத்த போதும் ரம்மியா அதற்க்கு மறுத்ததாக தெரிகிறது.

ramya

தனது பெற்றோருக்கு தெரியாமல் வெளியில் சுற்றி வருவது எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் நான் உண்மையாக தான் காதலிக்கிறேன் என ரம்மியா சொன்ன விஷயங்கள் சசி கிருஷ்ணாவை சமாதனப்படுத்தவில்லை.

மாறாக பொது இடத்தில் கத்தியால் குத்தி வெறித்தனமாக கொலை செய தான் வைத்துள்ளது, சம்பவத்தன்று ரம்மியாவை வலுக்கட்டாயமாக எப்படியாவது வெளியில் அழைத்து செல்ல வேண்டும்.

மற்ற காதலர்களை போல உல்லாசம் கொள்ள ஆசைப் பட்ட சசி கிருஷ்ணா, ஒரு கட்டத்தில் ரம்மியா கையை பிடித்து இழுத்து நடு ரோட்டிலேயே வம்பு இழுத்துள்ளார்.

இதற்க்கு கொஞ்சமும் இணங்காத ரம்மியா உறுதியாக நிற்க ஆத்திரத்தில் சசி கிருஷ்ணா மறைத்து வைத்திருந்த்ஜ கத்தியால் குத்தி ரம்மியாவை சாய்த்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் துடி துடித்து ரம்மியா இறந்து கிடந்த சம்பவத்தை நேரிப் பார்த்தும் யாரும் உதவிக்கு வராதது தான் உட்ச கட்ட அவலமே.

போலீசார் அங்கிருந்த சி சி டி வி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Categorized in: