சினிமா படத்தையே மிஞ்சக் கூடிய நிஜ சம்பவம் குறித்து தகவல் வெளியாகி கேட்பவர்களை கிருக்கல் ஆக்கியிருக்கிறது. மனைவி, பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் ஒருவர் ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் போல இரட்டை வேடம் போட்டு மற்றொருப் பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்தது அம்பலமானது.
சென்னை, அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பெனட் ராயப்பட் மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், தன்னுடன் வேலைப்பார்க்கும் மற்றொரு இளம் பெண் மீது ஆசை கொண்டுள்ளார்.
இதனால் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என பொய் கூறி, ஆசை வார்த்தைகளால் அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார், கடந்த நவம்பர் மாதம் நிச்சயமும் நடந்தள்ள நிலையில், தோழிகள் மூலமாக அந்த பெண்ணுக்கு பெனட் ஏற்கனவே திருமணமானவர் என தெரிய வர அதிரிந்து போன பெண் குடும்பத்தினர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட பெனட், அது என் அண்ணன் நான் தம்பி என ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய்ப்போல கெட்டப் மாற்றி கதை அளந்துள்ளார் .இதற்காக அவர் போலியான ஆதார் அட்டைகளை எல்லாம் தயாரித்து கொடுத்தும்.
சந்தேகமடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட உள்ளத்காகவும், அதற்காக முன்னதாக பெற்ற பணம் 3 லட்சத்தை கொடுக்கும் படியும் கேட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் வைத்து கொடுப்பதாக ஒத்துக் கொண்ட பெனட் பின்பு 1 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு மீதி பணத்தை கேட்டால் இளம் பெண்ணையே மிரட்டி வந்துள்ளார், இதனால் கடுப்பான பெண் குடும்பத்தினர், மீண்டும் அவர் மீது புகார் அளிக்க காவல் துறை பெணட் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது தாயை தேடி வருகின்றனர்.