ஆண் குழந்தை வேண்டும் என பெண் குழந்தையை கருவிலேயே கலைக்கும் முறைகள் முன்பு இருந்த காலக்கட்டங்களில் அதிகமாக பழக்கத்தில் இருந்து வந்தது.
இன்பெர்டிலிட்டி செண்டர்கள் அதிகமான நிலையில் தற்போது குழந்தை பிறப்பதே பெரிய விசயம் தான், அதிலும் இயற்கையாக பிறப்பது அதிர்ஷடம் என்றே சொல்லலாம்.
இந்த காலக்கட்டத்தில் பெண் ஒருவருக்கு சம்மதம் இல்லாமல் 8 முறை கரு கலைப்பும், ஆயிரத்தும் மேலான ஸ்டெராய்டு ஊசிகளும் போட்டு கணவர் கொடுமைப் படுத்திய சம்பவம் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது.
மும்பையில் படித்த வழக்கறிஞர்கள், டாக்டர் என பெரிய குடும்பத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வாக்கபட்டு போன பெண் 2009 -ல் ஒரு பெண் குழந்தையையும், 2011 – ல் ஒரு பெண் குழந்தையும் பெற்றுள்ளார்.
பெண் குழந்தைகள் பிறந்து என்ன லாபம் சொத்துக்களை ஆள ஆண் குழந்தை இல்லையே என மனைவியை கொடுமைப் படுத்த தொடங்கியுள்ளார் படித்த வழக்கறிஞர் கணவர். ஆரம்பத்தில் மனதளவில் நடந்த கொடுமைகளை தாங்கிய மனைவிக்கு அடுத்து உடல் அளவிலும் கொடுமைகளும் சித்திரவதைகளும் தொடங்கியது.
இது வரை 8 முறை அந்த பென்ணின் சம்மதமே கேட்க்காமல் அவரது கருவை சடத்திற்க்கு விரோதமாக கலைத்தும், உலக நாடுகளில் கிடைக்கும் சட்ட விரோதமான அறுவை சிகிச்சைகளும் அந்த பெண்ணுக்கு செய்யப்பட்டது.
ஆண் குழந்தை பெறுவதற்க்கென 1500 ஸ்டெராய்டுகளை ஊசி மூலமாக ஏற்றியுள்ளார்கள், இவை அனைத்தையும் பொறுக்க முடியாத மனைவி கணவருக்கு எதிராக புகார் அளிக்க,
பெண்ணின் புகார்களை கேட்ட போலீசார் அதிர்ந்து போய்விட்டனராம் மேலும் இவ்வளவுக்கும் காரணமான வழக்கறிஞர் கணவரை போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.