நடிகை விஜயலஷ்மி சீமான் சர்ச்சை தீராத பஞ்சாயத்தாகவே இருந்த நிலையில் தற்போது அந்த லிஸ்டில் ஹரி நாடாரும் சிக்கியுள்ளார்.

vijayalakshmi seeman

நடிகை விஜயலஷ்மி பிரகாஷ்ராஜ் நடிப்பில் 1997 களில் கன்னடத்தில் வெளியான ‘நாகமண்டலா’ படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்பு தமிழ், மலையாளம், தெலுங்கு என செம்ம பிசியாக நடித்து வந்த விஜயலஷ்மி, விஜய் – சூர்யா காம்போவில் வெளியான பிரெண்ட்ஸ் படத்திலும் பணியாற்றினார்.

சினிமாபட வாய்ப்புகள் குறைந்த நிலையில் விஜயலஷ்மி சீமான் உடன் திருமணம் ஆகாமல் உறவில் இருந்தார். இது குறித்து பல முறை அவர் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு அது சோசியல் மீடியாவில் செம வைரலாகியது.

vijayalakshmi seeman

இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவர் சீமான் ஹரி நாடார் இருவரும் தன்னை மிரட்டுவதாக கூறி தற்கொலை முயற்சி செய்தார்.

இதனை அடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட விஜயலஷ்மி தன்னை சிகிச்சையில் இருந்து பாதியில் விரட்டியதாக கூறப்பட்டது. தனக்கு பாதி சிகிச்சையில் மருத்துவ மனையில் இருந்து வெளியே அனுப்பியதாக பேட்டி அளித்தார், அது சர்ச்சையும் ஆனது.

hari nadar

இதற்கிடையில் ஹரி நாடார் மீது புகார் கொடுத்துள்ளார், விஜயலஷ்மி அதன் பேரில் திருவான்மியூரில் இருந்து ஹரி நாடாரை கைது செய்ய கடிதம் அனுப்ப பட்டதாக தகவல்.

இதனை அடுத்து, ஏற்கனவே கைது செய்யபட்டு சிறையில் இருக்கும் ஹரி நாடாரை மீண்டும் கைது செய்ய உள்ளதாக கடிதம் அனுப்பிதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categorized in: