சிவகார்த்திகேயன் அடுத்த படம் சீக்கிரமாக ஆரம்பிக்க போறாங்களாம் அதற்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேமஸான படத்தின் டயலாக்கை தான் டைடிலாகவும் வைத்துள்ளார்களாம்.
நடிகர் சிவ கார்த்திகேயன் பிரபலமான தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
குறிப்பாக சிறுவர்கள் பட்டாளமே அதிகம் , அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மிகவும் பிடித்த நடிகர், மேலும் ஒரு விழா மேலையில்,
சூப்பர் ஸ்டார் போலவே மிமிக்ரி செய்து அவரையே மிரள வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் புது படம் ஒப்பந்தம் ஆக உள்ளதாம்.
ராஜா ராணி படம் மூலமாக ஹிட் கொடுத்த அட்லீயின் அசிஸ்டண்ட் அசோக் இயக்கத்தில் நடிக்க உள்ளாரம் சிவ கார்த்திகேயன் அந்த படத்திற்க்கு ரஜினி – சிவாஜி நடித்த படத்தின் டயலாக் ஆன ‘சிங்க பாதை’ என்ற பெயர் வைக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் அயலான், டான் டாக்டர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.