முடிஞ்சா கைது பண்ணுங்க சவால் விட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன் போலீசார் சுற்றி வலைக்கபட்டு கைது செய்யபட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீரா மிதுன் பட்டியலினத்தை சேர்ந்த சினிமாக்காரர்களை விரட்டி அடிக்க வேண்டும் என பல அவதூறான வார்த்தைகளை பயன்படித்தி வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியதை அடுத்து பல கண்டனங்களையும் பதிவு செய்தனர். இந்த்ஜ நிலையில் தான் மீரா மீது பல்வேறு தரப்பில் புகார் அளிக்கபட்டது.
புகாரின் அடிப்படையில் மீராவை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் கேரளாவில் தலைமறைவாக இருந்த தகவல் கிடைக்க அங்கு விரைந்துள்ளனர்.
காதலர் சேமியுடன் பதுங்கியிருந்த மீராவை சுற்றி வளைத்த போலீஸ் அவரை கைது செய்ய முற்ப்பட்டபோது அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரடியுள்ளார்.
ஒரு கட்டத்தில் மீராவை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் அவரை சென்னை கொண்டுவர ஏற்ப்பட்டுகளை செய்து வருகின்றனர்.