சினிமாவில் பாலியல் ரீதியான சர்ச்சைகள் அவ்வபோது தலைத் தூக்குவது சகஜமாகி விட்டது. இருப்பினும் அதை சொல்லும் நபரை பொறுத்து பிரச்சனைகள் மாறுபடும்.

– Advertisement –


சிலர் பொய்யாகவும் வீண் பிரபலத்திற்காகவும் செய்வதும் உண்டு. அந்த வகையில் குழந்தை நட்சக்திரமாக இருந்து அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வந்த கல்யாணி அப்படி ஒரு பகீர் பேட்டி அளித்துள்ளார்.

கல்யாணி தமிழ் சினிமாவில் 90 களில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை துவங்கினார். இவர் அள்ளித்தந்த வானம் படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் குருவம்மா, ரமணா, ஜெயம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக கல்யாணி நடித்து இருக்கிறார்.

நடிகை கல்யாணி

மேலும், இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டும் இல்லாமல் பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் மிகப்பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக அவர்கள் அஜெஸ்மெண்ட் எதிர்ப் பார்த்தனர் சரிதான் போடா என சின்னத்திரை பக்கம் வந்தேன்.

– Advertisement –


அங்கேயும் சீண்டினார்கள் அஜெஸ்மெண்ட் எதிர்ப்பு பெரிய அளவில் தொல்லை கொடுக்கவே சினிமாவுக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

திருமணத்திற்க்கு பின்னர் என் கணவருடன் வெளி நாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டேன் என ஓபனாக பேசிய கல்யாணி. தனக்கு நடந்த சிறு வயது பாலியல் தொல்லை குறித்து கணவரிடம் தான் முதலில் கூறினாராம்.

கல்யாணிக்கு 8 வயது இருக்கும் போது இசை நிகழ்ச்சிக்காக அவரது அம்மாவுடன் வெளி நாட்டிற்க்கு சென்று தங்கி இருந்துள்ளார்.

நடிகை கல்யாணி


தற்போது மிக பெரிய அளவில் பிரபலமாக இருக்க கூடிய இசை அமைப்பாளர் ஒருவர் தனது குடும்ப நண்பராக இருந்தார். அவர் என் அம்மா நடன பயிற்சியில் இருக்கும் போது.

தான் தூங்கி கொண்டிருந்த நிலையில் என்னை தவறாக தொட்டார் எனவும், அவரது செயலால் நான் தற்கொலை வரை சென்றேன் எனவும் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

– Advertisement –


அந்த நபரை குறித்து நினைத்தால் இப்போதும் தனக்குள் மிகுந்த வேதனை உண்டாவதாகவும், அவர் தொட ஆரம்பித்த உடனே எனக்கு துக்கத்தில் முழிப்பு வந்து விடும்.


இருந்தாலும் கண்ணை பயத்தினால் இறுக மூடிக் கொள்வேன். இது குறித்து எனது அம்மாவிடம் கூட தற்போது வரை சொல்ல வில்லை. என் கணவர் மட்டும் தான் அறிவார் என அவர் ஒபனாக பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: