மதுரை முத்து என்றாலே எப்போதும் சந்தோஷமாக மற்றவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனிதராக மட்டுமே நமக்கு தெரியும் தற்போது அவரது சோகமான நிலை குறித்து அவரே மனம் திறந்து பேசிய வீடியோ அதிக வைரல் ஆகியுள்ளது.
– Advertisement –
சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே மேடைப் பேச்சாளராக இருந்து இருக்கிறார்.
இவர் பல மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார். அதன் பின் தொலைக்காட்சி சிரிப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமாகி மதுரை முத்து சின்னத் திரைக்கு அறிமுகமானார்.
இதன் மூலம் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தும் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் மதுரை முத்து சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.
மதுரை முத்து லேகா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவரது மனைவி தனது ஒன்னும் இல்லாத நிலையில் இருந்தே கூட இருந்தவர் எனவும் அவரது ஊக்கத்தால் தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன் எனவும் மதுரை முத்து சமீபத்தில் கூட பேசி இருந்தார்.
– Advertisement –
இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவருடைய மனைவி லேகா 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விபத்தில் எதிர்ப்பாராத விதமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அவருக்கு 32 வயது தான் ஆனது. பின் மதுரை முத்து சில மாதங்கள் கழித்து தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலரும் விமர்சித்து இருந்தார்கள்.
ஆனால், மதுரை முத்து தன் இரண்டு மகள்களுக்காக தான் திருமணம் செய்தார் என கூறப்பட்டது. மேலும் தற்போது சூப்பர் டாடி நிகழ்ச்சியில் மதுரை முத்து கண்ணீரோடு பேசிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.
– Advertisement –
அதில் என் மனைவி இறந்த பிறகு எனது மகள் பாத்துரூமில் இருக்கும் போது உதவிக்கு கூட என்னால் போக முடியாது. கிங்காங் அண்ணன் மனைவியை தான் கூப்பிட்டு போவேன் என கலங்கினார்.
எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மதுரை முத்துவுக்கு பின்னால் இவ்வளவு சோகமா என ரசிகர்கள் பலரும் அதிருந்து போய் இருக்கிறார்கள் .
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.