தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளாராம் தல அஜித்தின் ரீல் மகள் அணிகா சுரேந்தர் இந்த செய்தி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தல அஜித்துக்கு சினிமாவில் மகளாக நடித்து அவரது மகளாகவே மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை அணிகா சுரேந்தர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் படத்தில் அம்மாவை இழந்த அப்பாவோடு வளரும் மகளாக மன முதிர்ச்சியுடன் நடித்து அசத்தியவர்.
பின் நாட்களில் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்தார் அதில் கண்ணான கண்ணே படல் ஆகட்டும் உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் ஆகட்டும் செம்ம காம்போவால ஹிட் அடிச்சது.
தற்போது இணையத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் அணிகா சமீப நாட்களில் செம்ம ஹாட் போட்டோ ஷீட்களை செய்து வருகிறார்.
அவரது போட்டோக்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்றாலும் தல அஜித்தின் மகளாக நடித்த காரணத்தினாலே என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என வறுத்து எடுத்து வருகின்றனர்.
தற்போது அவருக்கு தெலுங்கில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளாத்காக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.