நடிகை ரஞ்சிதா முதல் ஸ்ருதி ஹரிஹரன் வரை நடிகர் அர்ஜீன் செய்த பல காதல் லீலைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
– Advertisement –
நடிகரும் பத்திரிக்கையாளரும் ஆன பயில்வான் ரங்கநாதன் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக இயக்குநர் பாக்கியராஜ் படங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து இருப்பார் .
இவர் சமீபத்தில் சினிமா வாய்ப்புகள் குறையவே யூடியூப் வீடியோவில் அதிகமாக நேர்காணல் கொடுத்து வருகிறார்.
அதிலும் பல நடிகர் நடிகைகளையும் அவர்கள் பர்சனல் உறவுகளையும் அலசி ஆராய்ந்து பேசி வருகிறார்.
அந்த வகையில் நடிகர் அர்ஜீன் ஆக்ஷன் கிங் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கட்டுக் கோப்பான உடல் வாகை கொண்டவர்.
ஆன்மீகத்தில் அதில் ஈடுபாடு உடையவர் சமீபத்தில் கூட ஆஞ்சநேயருக்கு தமிழகத்தில் சொந்த செலவில் பிரம்மாண்ட கோவிலை கட்டினார்.
– Advertisement –
இவர் நடித்த ஜெய்ஹிந்த் படத்தில் வரும் தாயின் மணிக் கொடி எனும் தேச பக்தி பாடல் இன்றளவும் சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களில் ஒலித்து வருகிறது.
அந்த அளவிற்க்கு பிரபலம் என்றாலும் சமீபத்தில் ஜீ தமிழில் வெளியான சர்வைவர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் அதீத இடம் பிடித்தார்.
இந்த நிலையில் பயில்வான், அர்ஜீன் ரஞ்சிதாவை காதல் தொல்லை கொடுத்ததால் தான் அவர் சினிமாவில் இருந்து விலகினார் எனவும் இது போல உடன் நடிக்கும் பல நடிகைகளுக்கு நெருக்கடி கொடுத்து இருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2018 ல் நிபுணன் படத்தில் அர்ஜீன் உடன் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்பவர் அர்ஜீன் தனது அனுமதி இல்லாமல் நெருக்கமான காட்சிகளில் எல்லை மீறியதாக குற்றம் சாட்டினார்.
இதற்க்காக அர்ஜீன் தரப்பில் ஸ்ருதி மீது வழக்கம் தொடரப்பட்டது. மேலும் அர்ஜீனுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.