பிரேம்ஜி அமரன் பிரபல இசை ஜாம்பவானாக கொடிக் கட்டி பறக்கும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன்.

– Advertisement –


கங்க அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரண்டு மகன்கள் இதில் மூத்த மகன் வெங்கட் பிரபு பிரபல இயக்குனர் சமீபத்தில் கூட சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வெற்றி கண்டவர்.

அவரது சென்னை 28 படம் துவங்கி இன்று வரை எல்லா படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் பிரேம்ஜி எனலாம் .

Singer vinaita

பிரேம் ஜிக்கு 42 வயசு ஆகியும் இன்னும் முரட்டு சிங்கிளாவே இருக்கீங்களே எப்போ கல்யாணம் என ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில்,

நடிகர் பிரேம்ஜி மற்றும் பிரபல பாடகி வினைதா இணைந்து சமூக வலைதலாத்தில் ஒன்றாக எடுத்து கொண்ட போட்டோக்களுடன் நெருக்கமான பாடல் வரியையும் பதிவிட்டு இருந்தனர்.

– Advertisement –


இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க இருவரும் காதலிக்குறீங்களா? எப்போது கல்யாணம் சீக்கிரமா பண்ணிக்கங்க என கமெண்ட் அடித்து வந்தனர்.

இந்த நிலையில் வினைதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டதில் – இது நிச்சயமா வதந்திதான். பிரேம் எனக்கு நீண்டகால, நல்ல ஃபிரெண்ட். நான் எப்போ எங்க ரெண்டு பேர் போட்டோஸ் போட்டாலும் கூடவே ஏதாவது பாட்டு போடறது வழக்கம்.

Premgi Amaren vinaita


அவர்கூட இருக்குற மாதிரி எத்தனையோ பேர் போட்டோஸ் போடறாங்க. நான் மட்டும் போடலையே, யாரோ நாங்க சேர்ந்து எடுத்துக்கிட்ட இந்தப் படத்தைப் பரவவிட்டு, வதந்தியைக் கிளப்பி விட்ருக்காங்க.

நிச்சயமா எனக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லை. பிரேம்ஜியை கல்யாணம் பண்ற ஐடியாவும் சுத்தமா இல்லை’ என ரசிகர்களை ஏமாற்றும் வகையில் பதில் அளித்து உள்ளார் வினைதா.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: