பாரதி கண்ணம்மா சீரியல் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நன்றாக இருந்த கணவன் மனைவி வாழ்க்கை சுக்கு நூறாக உடைவது தான் கதை.
பாரதி மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு பிரிந்து விடுகிறார், பின்னர் பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்று அம்மாவிடமும் ,மற்றொன்று அப்பாவிடமும் வளர்கிறது.
இதற்கிடையில் நடக்கும் சுவாரஸ்யங்களை மையமாக கொண்ட கதை களத்தில் எதார்த்தமான நடிப்பை கண்ணம்மா கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி வருகிறார், ரோஷினி ஹரிப்பிரியன்.
கண்ணம்மா ரோலுக்காகவே தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது, இந்த நிலையில் தான் சமீபத்தில் ரோஷினி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஷாப்பிங் மாலுக்கு போன ரோஷினி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் செம்ம ஹிட்டான டையலாக்கிற்க்கு வாய் அசைத்து டிராலியில் அமர்ந்தபடி போகிறார்.
ஒருபக்கம் இந்த வீடியோ ரசிகர்களால் ரசிக்கபட்டாலும் மற்றொரு பக்கம் செம்மயாக ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.