செம்பருத்தி சீரியல் பார்வதிக்கும் பாக்கியலஷ்மி சீரியல் செழியனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட நிலையில் இருவருக்கும் நிச்சயம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா, சீரியல் எதுவானாலும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலில் விழுவதும், கல்யாணம் ஆனாலும் அவர்களை விவாகரத்து செய்து உடன் ஜோடியாக நடிப்பவரை திருமணம் செய்வதை பார்த்து இருக்கோம்.
அதில் சர்ச்சையான கள்ள ஜோடிகள், கல்யாணம் பண்ணி செம்மையாக வாழும் ஜோடிகள் பலர் எடுத்து காட்டாக உள்ளனர்.

அந்த வகையில் தற்போது வெளியான செம்ம ஹாட் நியூஸ் தான் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரின் பிரபலமான பார்வதி கேரக்டர் நடிக்கும் ஷபனா நடிப்பிற்க்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.
அதே போல பாக்கியலஷ்மி தொடரின் முக்கிய கேரக்டர் செழியன் கேரக்டரில் நடிக்கும் ஆர்யன் என்கிற வேலு லட்சுமணன் இருவரும் இலை மறை காயாக காதலிப்பதை காண்பித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் ஆர்யனின் இன்ஸ்டா பக்கத்தில் உங்களை திருமணம் செய்து கொள்ளட்டுமா என ஒரு பெண் கேட்க அதற்க்கு அவர் ஷபானாவை டேக் செய்து இவருக்கு என்ன பதில் சொல்ல என கேள்வி கேட்க
கொஞ்சமும் யோசிக்காமல் ஷபானா அவரை மைன் என்னுடையவர் என குறிப்பிட்டு பதிவும் போட்டுள்ளார். இந்த நிலையில் ஆர்யன் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சையான படத்தை பதிவு செய்துள்ளார்.

ஆர்யன் கை மீது பெண் ஒருவர் கை வைத்து ஒரு போல மோதிரம் அணிந்துள்ளதை பார்த்து நிச்சயம் செய்து உள்ளதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.