வாட்சப்பில் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எதற்க்காக குரூப்பில் இருக்கிறோம் என்றே தெரியாமல் நூற்றுக்கணக்கான வாட்சப் குரூப்பில் இருந்து கொண்டு அதில் அனுப்பபடும் போட்டோக்கள், வீடியோக்கள் ஆயிர கணக்கில் டவுன்லோடு ஆகி கிடக்கும்.

காலப்போக்கில் இந்த போட்டோ, வீடியோக்கள் போனின் மொத்த மெமரியில் இருக்கும் அதிகபடியான இடத்தை அபகரித்துக் கொள்வதுடன், போன் ஸ்பீடையும் குறைத்து நமக்கு டென்ஷனை ஏற்றிவிடும்.

இந்த பிரச்சனைகளுக்கான முற்றுப்புள்ளியை வைக்க தான் வாட்சப் நிறுவனம் அல்டி மேட்டான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. (View once) ‘வியூ ஒன்ஸ்’ அப்டேட் .

இதன் மூலமாக குரூப்பில் பகிரப்படும் அதிகபடியான போட்டோக்கள், வீடியோக்கள் போனில் டவுன்லோடு ஆகாமல் சேட் பகுதியிலேயே இருக்கும் ஒரு முறை திறந்து பார்த்தவுடன் புதியதாக வரும் மீடியாக்களை கண்டறிய ஏதுவாக ‘opened’ என்ற பெயரில் இருக்கும்.

இதன் மூலமாக நமக்கு தேவையான போது குறிப்பிட்ட போட்டோ மற்றும் வீடியோவை பதிவிறக்கம் செய்யாமலேயே பார்த்து கொள்ளகூடிய வகையில் வடிவமைக்கபட்ட இந்த அப்டேட் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த அப்டேட்டை சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டதை அடுத்து வியூ ஒன்ஸ் அப்டேட் முதற்கட்டமாக உபயோகத்திற்க்கு வந்துள்ளது. அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் வரும் என வாட்சப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Categorized in: