ஒலிம்பிக் வீராங்கனை வீடு முன் ஜாதி பெயரால் அவமதித்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் சாதனைகளை படைத்து வரும் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியா. அவர் வீட்டின் முன்னதாக மர்ம நபர்கள் சிலர் மோசமாக நடந்துள்ளனர்.

அர்ஜெண்டினாக்கு எதிராக கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய அணி மயிரிழையில் தோல்வியை தழுவியதில் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

உத்திரகண்ட் மாநிலம் ரோஷனாபத்தில் தான் வந்தனா கட்டாரியாவீடு உள்ளது. அதன் முன்னர் சில மர்ம நபர்கள் பட்டாசு வெடித்தும் , கிண்டல் அடிப்பது போல வசை சொற்களை கோஷமிட்டு நடனமாடியதால் ,வந்தனா குடும்பத்தினர் தட்டி கேட்டுள்ளனர்.

ஏற்கனவே சோகத்தில் இருந்த குடும்பத்தினரிடம் மோசமாக நடந்து கொண்ட மர்ம நபர்கள் இந்திய ஹாக்கி அணியில் பட்டியல் இனத்தை சேர்ந்த நபர்கள் அதிகமாக இருப்பதால் தான் இந்திய அணி தொற்று போனதாக அநாகரீகமாக பேசினார்கள்.

இதனால் மனமுடைந்த குடும்பத்தினர் வீட்டிற்க்குள் சென்றுவிட அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்து, போலீசார் விரைந்து வந்ததில் ஒருவர் மட்டும் கைது செய்யபட்டுள்ளார். தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

Categorized in: