இந்தியர்களை பொறுத்த வரை அவர்கள் கன்னி வெடிக்கு பயப்படுறாங்களோ இல்லையோ கண் திருஷ்டிக்கு நிச்சயமாக பயப்படும் இயல்பை கொண்டவர்கள்.

அந்த வகையில் தான் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம், அன்கினாபள்ளி சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலில் பயிர் நடவு செய்துள்ளார். அதற்க்கான வேலைகளையும் செய்து வருகிறார்.

அவரது பயிர் நிலத்தின் மீது யாரும் கண் வைத்து விடக்கூடாது என்பதற்க்காக அவர் செய்த வேலைதான் இன்று உலக அளவில் அவரை ட்ரெண்டாக்கி உள்ளது.

ஆபாச படங்கள் மூலமாக பிரபலமான நடிகை சன்னி லியோன் நீச்சல் உடையில் இருக்க கூடிய ஆள் உயர போட்டோ பேனர்களை வயலின் ஆங்காங்கே நட்டு வைத்துள்ளார்.

இதனால் வயலை பார்ப்பவர்களின் கண்கள் பயிரை விட சன்னி லியோன் மீது தான் ஈர்க்கப்படும் இதனால் கண் திருஷ்டி ,பொறாமை உள்ளட்ட பிரச்சனைகளுக்கு உதவியாக இருக்கும் என பதில் அளித்துள்ளார், அந்த விவசாயி.

இந்த படம் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.


Categorized in: