பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்கள் மத்தில் அதிகம் விரும்பப்படும் சீரியல்களில் ஒன்று. சீரியலின் அழகான வில்லி தான் வெண்பா.

திருமணமான கணவன் மனைவி இடையே மற்றொரு பெண் ஊடுருவினால் என்ன விளைவுகள் வரும் என்பதைக் உணர்த்தும் கற்பனை காட்சிகளாக வருபவை தான் அந்த சீரியல்.

சமீபத்தில் கர்ப்பமாக இருந்த கண்ணம்மா வீட்டில் இருந்து வெளியேறி நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்ட விஷயம் இணையத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம்ம கண்டெண்ட் கொடுத்தது.


அந்த வகையில் சீரியலின் அழகான வில்லியாக அசத்தலான நடிப்பை வெளிபடுத்தி வருபவர் தான் வெண்பா எனும் பரீனா. ஒரு பக்கம் மோசமான வில்லியாக இருந்தாலும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர் பரீனா.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பரீனா 7 மாத கர்பிணியாக இருப்பதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார், அதில் இருந்து வெண்பா குறித்த செய்திகள் சூடுப் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

இதற்கிடையில், அவர் சீரியலில் இருந்து விலகுகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஒரு புறம் 4 வருடம் காத்திருந்து தாய்மை அடைந்த பரீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் வயிற்றில் குழந்தை இருக்கும் போது வயிறில் மெஹந்தி போடுவது, தண்ணீரில் மூழ்கி போட்டோக்கு போஸ் கொடுப்பது என வித விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவரது போட்டோக்களை ரசிகர்கள் ரசித்தாலும், குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி எல்லாமா செய்வது என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categorized in: