பிரபல நடிகை யாஷிகா ஆனந்த தனது வாழ்வின் பெரிய விபத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடந்து வந்தார், இதில் அவரது தோழியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.

பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் வளர்ந்து வரும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சமீபத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்து வந்தார் அந்த படமும் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யாஷிகா தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது கட்டு பாடு இழந்த யாஷிகா.

நிலை தடுமாறி காரை சாலையின் தடுப்பு சுவரின் மீது மோத கோரமான விபத்தில் சிக்கினார் உடன் இருந்த தோழி பவானி ஷெட்டி அமெரிக்காவில் பணி செய்தவர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

யாஷிகா பவானி ஷெட்டி

மேலும் பலமான அடிகளுடன் உயிர் பிழைத்த யாஷிகா தற்போது பல அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் உயிர் பிழைத்து வந்துள்ளார், எனினும் சுமார் 6 மாதம் வரை பெட் ரெஸ்ட் தான் என மருத்துவர்கள் குறியுள்ளனராம்.

யாஷிகாவின் பிறந்த நாளில் கூட அதை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களை கேட்டு கொண்டவர், தனது தோழி மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தும், மன்னிப்பு கோரியும் பதிவுகளை போட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CSGozXUFPft/

இதற்கிடையில் விபத்திற்க்கு முன்னதாக யாஷிகா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இறந்து போன பவானியால் எடுக்கபட்டது எனவும் அது தான் அவள் எடுக்கும் கடைசி புகைப்படம்னென எனக்கு தெரியவில்லையே என உணர்ச்சி வசபட்டுள்ளார்

மேலும் தான் மது போதையில் காரை ஓட்டியதால் தான் தனது தோழியின் இறப்புக்கு காரணமாகி விட்டேன் என பரவும் தகவல்கள் பொய்யானவை எனவும் பதில் அளித்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்

Categorized in: