நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் இருவரும் காதலித்து சில காரணங்களால் பிரிந்து விட்டனர்.
– Advertisement –
பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்ற நிரூப் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மேலும் அனிதா, தாமரை உள்ளிட்ட பலர் இணைந்து உள்ளனர்.
கடந்த பிக் பாஸ் சீசனில் நிரூப் நந்த குமார் யாஷிகா மூலமாக தான் பிக் பாஸ்க்கு வந்தேன் என முதல் பாலில் மொத்த நெகடிவ் வாலையும் உடைத்து விட்டார்.
நடிகை யாஷிகா முதலில் கவலை வேண்டாம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார், மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து, சோம்பி என பல படங்களில் நடித்தார்.
கடைசியாக எஸ் ஜே சூர்யாவுடன் படம் நடித்து முடித்த நிலையில் எதிர்ப்பாராத விபத்தில் தோழியை இழந்ததுடன் அவரது காலில் பலத்த காயம் பட்டார்.
காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக் காரணமாக பல அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளானார். மேலும் அவர் நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் சொன்ன நிலையில் அதனை மீறி மீண்டு வந்துள்ளார்.
– Advertisement –
நிரூப் மற்றும் யாஷிகா ஆனந்த் நெருக்கமான நண்பர்களாக தொடங்கிய நிலையில், அதீத காதலில் ரொமாண்டிக்காக காதலித்து வந்தனர் பல புகைப்படங்கள் வெளியாகியது.
பின்பு யாஷிகாவுடன் காதல் முறிவுக்கு காரணம் குறித்து பேட்டி அளித்த நிரூப், இருவருக்கும் செட் ஆகவில்லை, எனவே சரியாக பேசி புரிந்து தான் பிரிந்து விட்டோம்.
இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம் என தெரிவித்து இருந்தார். மேலும் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்.
தனக்கு திருமணம் செய்து கொள்ளா ஒரு நிபந்தனை உள்ளதாகவும், திருமணத்தை அடுத்து குழந்தை பெற்றுக் கொள்ள போவதில்லை எனவும் திட்டவட்டமாக பேசினார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் யாஷிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரூப் உடன் கல்யாணம் எப்போது என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு யாஷிகா நானும் நிரூப்பும் நல்ல நண்பர்கள் இருவரும் நண்பர்களாகவே இருக்க ஆசைப்படுகிறோம் மேலும் எங்களுக்கு திருமணம் செய்ய எந்த திட்டமும் இல்லை என பதில் அளித்துள்ளார்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.