உலகம் எங்கும் இன்று அதிக பரபப்பாக பேசப்படும் ஒரே பெயர் லதா மங்கேஷ்கர்கராக தான் இருக்க முடியும் அப்படொ ஒரு குரல், அவர் படைத்த சாதனைகள் பல.
– Advertisement –
லதா மங்கேஷ்கர் 1923ல் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அப்பா இசை கலையுடன் நாடகத்திலும் பெயர் போனவத் அவரிடம் தான் இசையை கற்றுக் கொண்டார்.
13 வயதில் அப்பாவின் இறப்பிற்க்கு பிறகு குடும்ப சூழலுக்காக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் லதா மங்கேஷ்கர்.

அவர் முதல் பாடல் மராத்தி படத்திற்க்காக தான் என்றாலும் சில காரணங்களால் அந்த பாடல் நீக்கபட்டது, பிறகு இந்தியில் தான் முதல் பாடலை பாடினார்.
அன்று துவங்கி இன்று வரை அசைக்கமுடியாத புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் லதா. ஏ ஆர் ரகுமான், இளையராஜா என இரண்டு இசை ஜாம்பவான்களோடும் பணியாற்றியவர்.
இவர் பாடிய வந்தே மாதரம் பாடல் இன்றளவும் ஒளித்து மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அவர் பாடகி மட்டும் அல்ல.
– Advertisement –
4 படங்களை தயாரித்த தயாரிப்பாளர், பாடகியுடன் சேர்ந்த நடிகை, இசை அமைப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர், இதற்க்காக மராத்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றவர்.
இந்திய அரசு சார்பில் பத்ம பூசன், பத்ம விபூசன், பாரத ரத்னா மற்றும் தாதா சாகிப் பால்கே என உயரிய விருதுகளை தன்னை தேடி வர வைத்தவர் லதா.
கடந்த மாதம் லேசானா கொரான அறிகுறிகளுக்காக மும்பை யில் பிரபலமான மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

ஆரம்பத்தில் செண்டிலேட்டரில் வைக்கபட்டதாக பின்னர் அவரது உடல் சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதால் தற்போது ஆக்சிசன் மட்டும் கொடுக்கபடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
நேற்று எதிர்ப்பாராத விதமாக உடல் நிலை மோசமாகவே அவருக்க்ய் தொடர்ந்து அவசர சிகிச்சை கொடுக்கபட்டது, இருந்தும் அவர் இன்று காலை இயற்கை எய்தினார்.

அவரது மறைவிற்க்கு திரையுலக பிரபலங்கள், குடியரசு தலைவர் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.