பிக் பாஸ் சீசன் 5 பிரபல தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசன் போட்டியாளர்களை கேமை கேமாக மட்டுமே விளையாடினார்கள்.

இந்த சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முடிந்த நிலையில், ராஜீ வெற்றியாளர், பிரியங்கா இரண்டாவது இடம் என அடுத்தடுத்த பரிசுகளை தட்டி சென்றனர்.

இந்த சீசனில் நிரூப் நந்த குமார் யாஷிகா மூலமாக தான் பிக் பாஸ்க்கு வந்தேன் என முதல் பாலில் மொத்த நெகடிவ் வாலையும் உடைத்து விட்டார்.

Yashika Niroop


பின்பு யாஷிகாவுடன் காதல் முறிவுக்கு காரணம் குறித்து பேட்டி அளித்த நிரூப், இருவருக்கும் செட் ஆகவில்லை, எனவே சரியாக பேசி புரிந்து தான் பிரிந்து விட்டோம்.

இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம் என தெரிவித்து இருந்தார். மேலும் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்.


தனக்கு திருமணம் செய்து கொள்ளா ஒரு நிபந்தனை உள்ளதாகவும், திருமணத்தை அடுத்து குழந்தை பெற்றுக் கொள்ள போவதில்லை எனவும் திட்டவட்டமாக பேசினார்.

அன்புக்காக நாம் ஏங்குவது போல தான் அந்த யாரும் இல்லாத குழந்தைகளும் ஏங்கும் எனவே தத்து எடுத்து கொள்ள தான் முடிவு செய்து இருக்கிறேன்.

இதற்க்கு ஒப்பு கொள்ளும் பெண்ணை தான் நிரூப் திருமணம் செய்து கொள்ள போவதாக பரபரப்பான பேட்டியை தனியார் நிறுவனத்திற்க்கு அளித்து உள்ளார்.

Categorized in: