நடிகை ஷில்பா ஷெட்டி என்றாலே பிட்னஸ் என்ற அளவுக்கு முன்மாதிரிதாக இருப்பவர். முதலில் மாடலாக இருந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்தவர்.

தமிழில் 90களில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து அந்த படத்தின் நடன புயல் பிரபு தேவாக்கு இணையாக அட்டகாசமாக ஆடி பிரபலமானவர்.

பின்பு ஹிந்தியில் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஷில்பா ஷெட்டி தொடர்ந்து புகழின் உச்சத்தில் இருந்து வந்தார்.

ஷில்பா ஷெட்டி முத்தம் கொடுத்த வழக்கு


இந்த நிலையில் தான் கடந்த 2007 ஆண்டில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்காக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஷில்பாவை அப்போதைய எய்ட்ஸ் விழிப்புணர்வு தூரதராக இருந்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் நடுவே ஷில்பாவை ரிச்சர்ட் யாரும் எதிர்ப்பாரத நிலையில் கட்டி அணைத்து முத்தம் கொடுத்த விஷயம் பெரும் பேசுப் பொருளாக மாறியது.

ஷில்பா ஷெட்டி முத்தம் கொடுத்த வழக்கு


இதனை அடுத்து ஷில்பா மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்தது.

அதில் விசாரணை செய்த நீதிபதி நடந்த சம்பவத்திற்க்கும் ஷில்பாவுக்கும் சம்மந்தம் இல்லை. உண்மையில் அவர் பாதிக்க்பட்டவர் தான்.

உண்மையான குற்றவாளி ரிச்சர்ட் தான் எனவும் இந்த வழக்கில் இருந்து ஷில்பாவை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பு எழுதியுள்ளார். இந்த விஷயம் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Categorized in: