நடிகை பரீனா பிறந்த குழந்தை, கணவருடன் சமீபத்தில் செய்த போட்டோ ஷீட் பிக்ஸ் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
பாரதி கண்ணம்மா தொடரை பொறுத்த வரை விஜய் டிவியில் தற்போது வரை டி ஆர் பியின் உச்சத்தில் உள்ள சீரியல். பிரிந்த கணவன்-மனைவிக்கு இடையே 2 பெண் குழந்தைகள் அவரைகளை இணைத்து வைக்க போராடும் குடும்பம் என கதை களம் நகர்ந்து வருகிறது.

இதில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அதிலும் அவர் கர்ப்பமானதை அறிவித்த நாள் முதலே அவர் போடாத கெட்டப் இல்ல, கொடுக்காத போஷீம் இல்லங்க.

இந்த நிலையில் தான் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை பிறந்தது. அதற்காக சிறிய கேப் எடுத்தார் பரீனா.
தற்போது மீண்டும் செம பூஸ்டாக வந்து வில்லியால மிரட்டி வரும் வெண்பா அவரது கையில் குழந்தைக்கு பால் கொடுத்த வாறே மேக்கப் போட்டுக் கொள்ளும் காட்சிகளும் வைரல் ஆனது.

இதனை அடுத்து தான் எகிப்து ராணியாக பரீனாவும், ராஜாவாக அவரது கணவரும் இளவரசர் போல அவரது குழந்தையும் வேடமிட்டு செய்த போட்டோ ஷீட் இணையத்தில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.