ராஜீக்கு ஆதரவாக இதுவரை பேசி வந்த தாமரை தற்போது வெளியான பிரமோவில் ராஜீவை குறை சொல்லுவது போலவும் உள்ளது.
பிக் பாஸ் சீசன் 5-ல் முதல் நாளில் இருந்தே வீட்டு வேலை செய்வதில் போட்டியாளர்களுக்கு உள்ளேயே பிரச்சனை வருவது சகஜம் தான்.
கடந்த சில வாரங்களில் ராஜீ தனது வேலையை செய்யாமல் ஓப்பி அடிப்பதாக தொடர்ந்து பிரியங்கா குற்றம் சாட்டி வந்த நிலையில்,
அந்த பஞ்சாயத்து கமல் சார் முன்னிலையிலும் வந்த போது, ராஜீ வேலை செய்வதாக உறுதி அளித்து சர்டிபிக்கேட்டும் கொடுத்தது அனைவரும் அறிந்தது தான்.
இந்த நிலையில், இன்று காலை முதலில் வெளியான பிரமோவில் தாமரை வீட்டு வேலைகளை தலைவர் இல்லாத காரணத்தால் சில போட்டியாளர்கள் ஏமாற்றுவதாகவும்,
பிரியங்கா, பாவனி முன்பாக குறை சொல்ல எப்படியோ பத்த வைச்சது வீண் போகலன்னும் பிரியங்கா நமட்டு சிரிப்பு சிரிப்பதாகவும் இந்த பிரமோ உள்ளது.