பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் அமோகமான வரவேற்பைப் பெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக பிக்பாஸ் அல்டிமேட் துவங்கியது. கடந்த ஜனவரி 31 தேதி முதல் துவங்கிய பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னி ஹாஸ்டாரில் 24/7 லைவாக ஒளிபரப்பு செய்யப் பட்டு வருகிறது.
– Advertisement –
இதில் முந்தைய சீசன்களில் இருந்த சினேகன், வனிதா, அபிராமி, நிரூப், ஷன்ம் செட்டி , பாலாஜி முருகதாஸ் என பலர் இடம் பெற்றுள்ளனர்.
சென்ற சீசனில் இழந்தவற்றை இந்த சீசனில் பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லா போட்டியாளர்களும் விளையாடி வருகின்றனர்.
அதில் மக்கள் நீதி மய்யம் பிரதிநிதியும், பாடல் எழுத்தாளரும் ஆன சினேகன் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக சீசன் ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அதில் ஆரவ் முதல் வெற்றியாளராக அறிவிக்கபட்டதை அடுத்து இரண்டாவது ரன்னராக சினேகன் வென்று இருந்தார். இந்த நிலையில் தற்போது அல்டிமேட்டிலும் வந்துள்ளார்.
இதில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் சினேகன் தான் வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்க பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சினேகன் தனது 10 வருட காதலியும் நடிகையுமான கன்னிகா ரவியை கரம் பிடித்தார்.
– Advertisement –
அவரது திருமணத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தலைமையில் நெருக்கமான நண்பர்களுடன் கோலாகலமாக நடத்தினார்கள்.
இந்த நிலையில் கணவர் பிக்பாஸீக்கு சென்றதால் தனிமையில் வாடி வருகிறாராம் கன்னிகா. அவரது கணவர் எழுதிய பாடல் வரிகளை ஸ்டேடசாக போட்டு வருகிறார்.
அதில் அவரது தோழியுடன் சமீபத்தில் டூர் ஒன்றை அடித்து இருக்கிறார் அதற்க்கு இரைச்சல் இல்லாமல் அமைதியை தேடி என கேப்ஷன் கொடுத்து உள்ளார்.
இவரது தனிமை தணிக்க இவர் செய்வது அறியாமல் திணறி வருவதாக ரசிகர்கள் அவரை தேற்றி வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.